உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நிரம்பி வழியும் தடுப்பணை; விவசாயிகள் மகிழ்ச்சி

 நிரம்பி வழியும் தடுப்பணை; விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம்: ஏழு எருமை பள்ளத்தில், புதிதாக கட்டியுள்ள தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாய கிணறுகளில் நீர் ஊற்று அதிகளவில் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து ஏழு எருமை பள்ளம் துவங்குகிறது. அங்கிருந்து காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள், சிறுமுகை பேரூராட்சி வழியாக, இப்பள்ளம் பவானி ஆற்றுக்கு செல்கிறது. மழை காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை தேக்கி வைக்க, ஏழு எருமை பள்ளத்தில் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், சுற்றுப்பகுதியில் உள்ள கிணறுகளுக்கு நீர் ஊற்று கிடைத்து வருகிறது. ஏழு எருமை பள்ளத்தில் வரும் தண்ணீருடன், பெள்ளாதி குளம் நிரம்பி வழியும் தண்ணீர், அண்ணா நகர் அருகே ஒன்று சேர்கிறது. இந்த இடத்தில், தடுப்பணை கட்டும்படி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதை அடுத்து அரசு நிதி மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன், ஒரு கோடி ரூபாய் செலவில், ஏழு எருமை பள்ளத்தில், 140 அடி நீளம், 10 அடி உயரமுள்ள தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பெள்ளாதி விவசாயிகள் கூறுகையில், ''தற்போது கட்டிய தடுப்பணையால், ஏழு எருமை பள்ளத்தில் ஒரு கிலோ மீட்டர் வரை தண்ணீர் தேங்கியுள்ளது. விவசாய பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதால், விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை