நெல் கொள்முதல் மையம் ஆனைமலையில் துவக்கம்
ஆனைமலை: ஆனைமலை அருகே, ஆழியாறு அணை வாயிலாக, புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகள் பாசனம் பெறுகின்றன.பழைய ஆயக்கட்டு பாசனத்தில், நெல் சாகுபடி செய்யப்படுகிறது.நடப்பாண்டு சாகுபடி செய்யப்பட்ட நெல், தற்போது அறுவடை செய்யப்படுகிறது. இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது.அதிகாரிகள் கூறியதாவது:விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நெல் கொள்முதல் மையம் துவங்கப்பட்டுள்ளது. சன்ன ரகம் ஒரு குவிண்டாலுக்கு, 2,450 ரூபாய்; பொது ரகம் ஒரு குவிண்டால், 2,405 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காலை, 9:30 மணி முதல், மதியம், 1:30 மணி வரையும், மாலை, 2:30 மணி முதல் மாலை, 6:30 மணி வரையும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.