மேலும் செய்திகள்
22 இலங்கை தமிழர் ஜோடிகளுக்கு திருமணம்
27-Jul-2025
இலங்கை தமிழர் திருமண பதிவுக்கு சிறப்பு முகாம்கள்
20-Jul-2025
மேட்டுப்பாளைம்; இலங்கை தமிழர் மறுவா ழ்வு முகாமில் 35 பெண்களுக்கு பெயின்டிங் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. மேட்டுப்பாளையம் அருகே வேடர் காலனி பகுதி உள்ளது. இங்கு இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெண்களுக்கு 'பியூட்டிபுல் ஹோம்ஸ் அகாடமி' சார்பில் சி.எஸ்.ஆர். செயல்பாடுகளின் ஒரு பகுதியாக பெயின்டிங் வகுப்பு நடத்தப்பட்டது. தினேஷ் பாபு தலைமையிலான குழுவினர் இங்குள்ள பெண்களுக்கு பெயின்டிங் தொடர்பான ஆரம்ப கட்ட பயிற்சி வகுப்புகளை நடத்தினர். இதுகுறித்து பயிற்சியாளர் சண்முகராஜ் கூறுகையில், இந்த பயிற்சி வகுப்பில் பெயின்டிங் தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் அதன் செயல்பாடுகள், உள் பக்க சுவர்கள், வெளி பக்க சுவர்களுக்கு எவ்வாறு பெயின்ட் அடிக்க வேண்டும், பட்டி பார்ப்பது எப்படி, பெயின்ட் அளவு போன்றவைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. மேலும், அவர்களை பெயிண்ட் அடிக்க வைத்தும் நடைமுறை வகுப்புகள் நடத்தப்பட்டன.இதில் 35 பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர், என்றார்.----
27-Jul-2025
20-Jul-2025