உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சிவகங்கை பஸ் மீது பாலக்காடுபஸ் மோதல்

 சிவகங்கை பஸ் மீது பாலக்காடுபஸ் மோதல்

காரமடை: கூடலூரில் இருந்து பாலக்காடு செல்லும் அரசு பஸ், காரமடை அருகே மேட்டுப்பாளையம் - கோவை சாலையில் கோவையை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சின் முன், மேட்டுப்பாளையத்தில் இருந்து சிவகங்கை செல்லும் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. டீச்சர்காலனி பகுதியில், சிவங்கை பஸ் குறுக்கே கார் ஒன்று வந்ததால் திடீரென பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பின் வந்த பாலக்காடு பஸ், சிவகங்கை பஸ்சின் பின் பக்கம் மோதியது. பாலக்காடு பஸ்சின் முன் கண்ணாடி உடைந்தது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கீழே இறக்கப்பட்டு மற்றோரு அரசு பஸ்சில் அனுப்பிவைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி