ஊராட்சி செயலர்கள் இடமாற்றம்
மேட்டுப்பாளையம்; காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, நான்கு ஊராட்சிகளின் செயலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. இதில், 4 ஊராட்சிகளின் செயலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தேக்கம்பட்டி ஊராட்சி செயலராக பணியாற்றிய தங்கராஜ், ஓடந்துறை ஊராட்சிக்கு மாற்றப்பட்டார். காளம்பாளையம் ஊராட்சி செயலர் செந்தில்குமார், தேக்கம்பட்டி ஊராட்சிக்கு மாற்றப்பட்டார். பெள்ளாதி ஊராட்சி செயலர் சுரேஷ்குமார், சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு மாற்றப்பட்டார். சிக்காரம்பாளையம் ஊராட்சி செயலர் நேசராணி, பெள்ளாதி ஊராட்சிக்கு மாற்றப்பட்டார். வெள்ளியங்காடு ஊராட்சி செயலர் மாலதி, காளம்பாளையம் ஊராட்சி செயலராக கூடுதல் பொறுப்பு வகிப்பார். இதற்கான உத்தரவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.