மேலும் செய்திகள்
கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்கள்
06-Mar-2025
அன்னுார்; கோவை மாவட்டத்தில், ஊராட்சி செயலர்கள் பதவி உயர்வுக்காக, பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.கோவை மாவட்டத்தில், 12 ஊராட்சி ஒன்றியங்களில், 228 ஊராட்சிகளில் ஊராட்சி செயலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 30 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு, ஊராட்சி செயலர்களுக்கு, பதிவறை எழுத்தர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.இளநிலை உதவியாளர்கள் பணி நியமனத்தின்போது, 20 சதவீத பணியிடங்களை ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதன்படி பெரும்பாலான மாவட்டங்களில் ஊராட்சி செயலர்களுக்கு, இளநிலை உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.ஊராட்சி செயலர்கள் சிலர் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் ஊராட்சி செயலர்களின் பணி மூப்பு பட்டியல் வெளியாகிறது. ஆனால், இளநிலை உதவியாளர்கள் பணி நியமனத்தின் போது ஊராட்சி செயலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. அருகில் உள்ள திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஊராட்சி செயலர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஆனால், கோவை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக ஊராட்சி செயலர்களுக்கு பதவி உயர்வு வழங்கவில்லை.'இதனால், 35 ஆண்டுகள் பணிபுரிந்தும் எந்த பதவி உயர்வும் இல்லாமலே பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டி உள்ளது. அதிக அளவில் பணப்பலன்களும் கிடைப்பதில்லை. குறைந்த ஊதியத்துடன் ஓய்வு பெற வேண்டி உள்ளது.கோவை மாவட்ட நிர்வாகம் விரைவில் இளநிலை உதவியாளர் பணி நியமனத்தில் பணி மூப்பு அடிப்படையில் ஊராட்சி செயலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்' என்றனர்.
06-Mar-2025