உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பகுதி நேர நுாலகம்; வாசகர்கள் கோரிக்கை

பகுதி நேர நுாலகம்; வாசகர்கள் கோரிக்கை

வால்பாறை: வால்பாறை தாலுகாவில் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் முழுநேர நுாலகமும், சோலையாறுநகர், அட்டகட்டி, காடம்பாறை ஆகிய பகுதிகளில் பகுதி நேர நுாலகமும் செயல்படுகின்றன. வால்பாறையை சுற்றிலும், 50க்கும் மேற்பட்ட எஸ்டேட்கள் இருந்தாலும், அங்கு நுாலகம் அமைக்கப்படவில்லை. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் எஸ்டேட் பகுதியில் செயல்பட்ட மனமகிழ் மன்றமும் தற்போது செயல்படுவதில்லை. இதனால், எஸ்டேட் பகுதியில் படித்த இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அன்றாட செய்திதாள்களை வாசிக்க கூட முடியாமலும், நுால்களை படிக்க முடியாமலும் தவிக்கின்றனர். இது குறித்து, எஸ்டேட் வாசகர்கள் கூறியதாவது: தொலைதுார பகுதியில் உள்ள எஸ்டேட்டில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. பல ஆண்டுளகாக இயங்கி வந்த மனமகிழ் மன்றங்கள் தற்போது மூடப்பட்டதால், அன்றாட செய்தி தாள்களை கூட படிக்க முடியாத நிலை உள்ளது. மனமகிழ் மன்றங்களை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நுாலக துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வாசகர்கள் பயன்பெறும் வகையில் கருமலை, ரொட்டிக்கடை, முடீஸ், சின்கோனா, கவர்க்கல் உள்ளிட்ட பகுதிகளில் பகுதி நேர நுாலகம் அமைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை