மேலும் செய்திகள்
விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
14-Jun-2025
வால்பாறை; வால்பாறை எம்.எல்.ஏ., மறைவுக்கு, பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.வால்பாறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் அமுல்கந்தசாமி. இவர், கடந்த இரண்டு மாதங்களாக கோவை தனியார் மருத்துவமனையில், உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.அவரது மறைவுக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வால்பாறை அண்ணா திடலில் நடந்தது. அ.தி.மு.க., நகர துணைச்செயலாளர் பொன்கணேஷ் தலைமை வகித்தார். மாவட்ட பேரவை இணைச்செயலாளர் நரசப்பன், அவைத்தலைவர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் அழகசுந்தரவள்ளி, ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க தலைவர் கருப்பையா, தி.மு.க., அவைத்தலைவர் செல்லமுத்து உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் கலந்து கொண்டு, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
14-Jun-2025