மேலும் செய்திகள்
திருச்செந்துாருக்கு ரயில் இயக்க வலியுறுத்தல்
27-Jan-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ரயில்வே ரோட்டில், இரவு நேரத்தில் மது அருந்துவோரால், பயணியர் அச்சமடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு, நாள்தோறும் ஏராளமான பயணியர் வந்து செல்கின்றனர். இதில், வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, இரவு நேர ரயில்களுக்கு அதிகப்படியான பயணியர் செல்கின்றனர்.இரவு நேரத்தில், கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியே வரும்போது, சிலர் ரயில்வே ரோட்டில் அமர்ந்து மது குடிக்கின்றனர். இதனால், பெண் பயணியர் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.மேலும், சிலர் ரயில்வே டிராக் அருகே, பாதுகாப்பு இன்றி இருக்கும் மண் ரோட்டில் செல்கின்றனர். இங்கு மது குடித்து விட்டு, காலி பாட்டில்களை வீசி செல்கின்றனர். சில நேரங்களில் பாட்டில்களை உடைத்தெரிகின்றனர்.இவ்வழியில், பயணியர் செல்லும் போது துர்நாற்றம் வீசுவதுடன், கண்ணாடி துண்டுகளால் காலில் காயம் ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.எனவே, இங்கு அமர்ந்து மது குடிப்பவர்கள் மீது, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க, இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட வேண்டும், என, ரயில் பயணியர் வலியுறுத்துகின்றனர்.
27-Jan-2025