ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சென்னியப்பன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள், உதவியாளர்களுக்கு குறைந்தபட்சம் 7,850 ரூபாய் ஓய்வூதியம் வழங்கவேண்டும்.ஆட்சிக்கு வந்த உடன், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தேர்தலில் அளித்த வாக்குறுதியை தமிழக முதல்வர் ஸ்டாலின், உடனடியாக நிறைவேற்றவேண்டும்.70 வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்கவேண்டும்.மாதந்தோறும் ஆயிரம் ரூபாயாக மருத்துவப்படியை உயர்த்தி வழங்கவேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை முழுமையாக களையவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். - நமது நிருபர் -