ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
அன்னுார்: கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பென்சனர்களுக்கு குறைந்தபட்ச மாத பென்சன் 7,850 ரூபாய் வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில், காசு இல்லாமல் முழுமையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். கம்யூட்டேஷன் பிடித்தம் 15 ஆண்டுகளில் இருந்து 11 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கடந்த ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் துணைத் தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் இளவரசு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பென்சனர் சங்கத் துணைத் தலைவர் தாமோதரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.