உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அன்னுாரில் சினிமா ஷூட்டிங் கண்டு களிக்க திரண்ட மக்கள்

அன்னுாரில் சினிமா ஷூட்டிங் கண்டு களிக்க திரண்ட மக்கள்

அன்னுார் : அன்னுாரில் சினிமா பட ஷூட்டிங் பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.அன்னுார் அருகே ஓதிமலை கரடு பகுதியிலும், ஓரைக்கால் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சினிமா ஷூட்டிங் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் அன்னுார் நகரில், கடந்த நான்கு நாட்களாக, கோவை ரோட்டில், கே.ஜி. குரூப்புக்கு சொந்தமான குடோனில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.படப்பிடிப்பு நடந்து வரும் கட்டடத்தின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் 'பெருமாள் சோடா' என்னும் வார்த்தைகள் மலையாளம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெரிதாக எழுதப்பட்டுள்ளன.மலையாள நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான், பாக்யராஜ் மகன் சாந்தனு பாக்யராஜ், கருணாஸ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிப்பதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர்.சாந்தனு பாக்யராஜை பார்ப்பதற்காகவும், ஷூட்டிங்கை பார்ப்பதற்காகவும் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இதனால் கோவை ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கேரள பதிவெண் கொண்ட கார், வேன், கேரவன் மற்றும் பஸ்கள் கோவை ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை