மேலும் செய்திகள்
வாழ்வாதாரம் மேம்படுத்த ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
22-Sep-2025
ஆனைமலை; பொள்ளாச்சி - சேத்துமடை ரோடு ஆனைமலை சின்னப்பள்ளிவாசல் அருகே பூஞ்சோலை நகர் பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் கூறுகையில், 'ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட பூஞ்சோலை நகரில், சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை' என்றனர். போலீசார், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி ஆகியோர், பூஞ்சோலை நகரில் சாலை வசதிகள் அமைக்க ஒரு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். சமரசம் அடைந்த மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
22-Sep-2025