மேலும் செய்திகள்
அறிவிப்பில்லா மின் தடை பழல் பகுதி மக்கள் அவதி
10-Mar-2025
அறிவிப்பில்லா மின் தடை புழல் பகுதி மக்கள் அவதி
10-Mar-2025
பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அடிக்கடி மின்வினியோகம் தடைபடுவதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பலரும் உஷ்ணத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள, பழச்சாறு, இளநீர் உள்ளிட்ட நீர் ஆகாரங்களை பருகி வருகின்றனர். இரவில், ஏசி, மின்விசிறி பயன்பாடு அதிகரித்துள்ளது.அதேநேரம், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் இரவில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள், உறக்கமின்றி பரிதவிக்கின்றனர்.மக்கள் கூறுகையில், 'இரவில், மின்தடை ஏற்பட்டால், 10 நிமிடம் முதல் அரை மணி நேரம் கழித்த பின்னரே மின் வினியோகம் செய்யப்படுகிறது. இப்பிரச்னை அதிகரித்து வருவதால், குழந்தைகள், பெரியவர்கள் என, பலரும் பாதிக்கின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வீட்டில் புழுக்கம் கூடுதலாகிறது,' என்றனர்.இது குறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:வெப்பம் அதிகரிப்பால், ஒரே நேரத்தில் ஏசி, மின்விசிறிகள் அதிகளவில் பயன்பாட்டில் இருப்பதால், குறைந்த மின்னழுத்த பிரச்னை மற்றும் மின்தடை ஏற்படுகிறது. அதேபோல, வீடுகளில், அவ்வப்போது மின் சாதனங்களில் திடீரென ஏற்படும் பழுதால், மின் தடை ஏற்படுகிறது. அதுவும் விரைந்து சரி செய்யப்படுகிறது.மின் உபகரணங்கள் பழுதை சீர் செய்ய, 15 முதல் 20 நிமிடம் மின் இணைப்பு துண்டிக்க வேண்டியுள்ளது. மின் இணைப்பை துண்டித்தால் மட்டுமே, மின் பழுதை சரி செய்ய முடியும். இதனை புரிந்து கொண்டு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
10-Mar-2025
10-Mar-2025