வேகத்தடை அமைக்க மக்கள் வலியுறுத்தல்
நெகமம்: கோவில்பாளையம் -- நெகமம் செல்லும் ரோட்டில், காணியாலம்பாளையம் இணைப்பு ரோடு அருகே வேகத்தடை இல்லாததால் விபத்து ஏற்படுகிறது. கோவில்பாளையத்திலிருந்து நெகமம் செல்லும் ரோட்டில் அதிகளவில் கனரக வாகனங்களும், உள்ளூர் மக்களின் பைக், கார் போக்குவரத்தும் உள்ளது. இதில், காணியாலம்பாளையம் செல்லும் இணைப்பு ரோட்டில் இருந்து, நெகமம் செல்லும் ரோட்டில் திரும்பும் வாகனங்கள் வேகமாக பயணிக்கிறது. இரவு நேரத்தில் இவ்வழியாக வரும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. இங்கு வேகத்தடை இல்லாததால், வாகன ஓட்டுனர்கள் செல்லும் போது, அச்சத்துடன் பயணிக்க வேண்டியதுள்ளது. இதை அமைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் ஊராட்சிக்கும், சம்பந்தப்பட்ட துறையினருக்கும் பல முறை புகார் தெரிவித்துள்ளனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இணைப்பு ரோடு அருகே, வேகத்தடை அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.