உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓவியங்களில் பேரூர் புராணம்

ஓவியங்களில் பேரூர் புராணம்

கோவில் நுழைவாயிலில் முன்பு உள்ள மேற்கூரையில், நடராஜர் ஆனந்த நடனம் ஆடும் ஓவியமும், கோவிலில் நுழைந்ததும் உள்ள மேற்கூரையில், 63 நாயன்மார்கள், தனித்தனியாக வரையப்பட்ட ஓவியங்களும் உள்ளன. அதன் இருபுறமும், கச்சியப்ப முனிவர் இயற்றிய பேரூர் புராணத்தின் 36 படலங்களும், தனித்தனியாக வரையப்பட்டு, அதில் ஒவ்வொரு படலத்தின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. கனகசபை மண்டபத்தின் மேற்கூரை விதானத்தில், சிவபெருமானின் 8 பராக்கிரமங்களை குறித்த, அஷ்ட வீரட்ட தல ஓவியம் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் அனைத்தும் மூலிகை வர்ணங்களை கொண்டு, கலை அம்சங்களுடன் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள், கோவிலின் வரலாறு மற்றும் சிவபெருமானின் பெருமைகள், அறுபத்தி மூவரின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் வரையப்பட்டுள்ளதால், கோவிலுக்கு வரும் இன்றைய தலைமுறையினர், இத்தலத்தின் சிறப்புகளையும், சிவபெருமானின் பராக்கிரமத்தையும் எளிதில் அறிந்து கொள்ள முடியும். கோவில் நுழைவாயில் முதலே வரையப்பட்டுள்ள ஓவியங்கள், கோவிலுக்கு வரும் பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை