உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜி.எஸ்.டி., தவிர்க்க கலெக்டரிடம் மனு

ஜி.எஸ்.டி., தவிர்க்க கலெக்டரிடம் மனு

பொள்ளாச்சி: இயற்கை விவசாயத்திற்கு ஜி.எஸ்.டி., பில் கேட்காமல், விவசாயிகளுக்கு மானியம் அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆனைமலைக் குழு செயலாளர் மணிகண்டன், கோவை கலெக்டர் கிராந்திகுமாரிடம் அளித்த மனுவில், 'ஆனைமலை தாலுகாவில் விவசாயிகள் குழுவாக சேர்ந்து, இயற்கை விவசாயம் செய்கின்றனர்.இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் இருந்தே உரம் தயாரிக்கப்படுகிறது. எனவே, அங்கக வேளாண்துறையில் இயற்கை விவசாயத்திற்கு ஜி.எஸ்.டி., பில் கேட்காமல், மானியம் அளிக்க வேண்டும். கோட்டூர் பேரூராட்சியில் வரி வசூலில் கடுமை காட்டுவதை தவிர்க்க வேண்டும். குடிநீர் குழாயில் உடைப்பு மீண்டும் ஏற்படாத வகையில் சீரமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ