உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மயானத்துக்கான இடம் கோரி முதல்வருக்கு மனு

 மயானத்துக்கான இடம் கோரி முதல்வருக்கு மனு

சூலூர்: சூலூரில் கிறிஸ்துவர்களுக்கான மயான இடத்தை ஒதுக்கீடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சூலூர் கிறிஸ்துவ சமூக அறக்கட்டளை கோரிக்கை விடுத்துள்ளது. சூலூர் கிறிஸ்துவ சமூக அறக்கட்டளை தலைவர் ஸ்டான்லி பீட்டர், முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பியுள்ள மனு விபரம்: சூலூர் பேரூராட்சியில், 2 ஆயிரத்து, 500 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வசித்து வருகிறோம். ஆர்.சி., சி.எஸ்.ஐ., மற்றும் 20 க்கும் மேற்பட்ட சுயாதீன சபைகள், உள்ளன மற்ற சமுதாய மக்களுக்கு என, தனியாக மயானங்கள் உள்ளன. கிறிஸ்தவர்களுக்கு என்று தனியான பொது பயன்பாடான கல்லறை தோட்டம் எதுவும் இல்லை. கக்கன் நகர் பகுதியில், அரசு புறம்போக்கு நிலத்தில் இறந்தோரின் சடலங்களை மத சடங்குகளின் படி அடக்கம் செய்து வருகிறோம். அந்த இடத்தை வகை மாற்றம் செய்து தர மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை முறையீடு செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சிறுபான்மையினர் நல ஆணையத்திடம் மனு அளித்தும் பதில் இல்லை. எனவே, புறம்போக்கு நிலத்தை வகை மாற்றம் செய்து தர, மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டுகிறோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை