மசோதாவை ரத்து செய்ய கோரி மாவட்ட கலெக்டருக்கு மனு
வால்பாறை, ; சுற்றுச்சூழல் நுண் உணர்வு மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், என, தே.மு.தி.க., வலியுறுத்தியுள்ளது.வால்பாறை தே.மு.தி.க., நகர செயலாளர் பாலாஜி ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வளமையான வனம், உயிரினங்கள், நீர் ஆதாரம், நதிகள் ஆகியவற்றை எதிர்காலங்களில் மாசில்லாமல் பேணிக்காக்கவும், இயற்கையுடன் இணைந்து மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.நீர் ஆதாரங்களின் முழுபயனை அடையவும், நீரின்றி வறண்டு கிடக்கும் நிலபரப்பிற்கு, இங்குள்ள நீரீனை கொண்டு சென்று பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களை முன்னிருத்தி, 'சுற்றுச்சூழல் நுண் உணர்வு மசோதா' வரைவு அறிக்கை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மசோதா அமல்படுத்தினால் வால்பாறை மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.வால்பாறை மக்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு தடையாக உள்ள இந்த மசோதாவை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.