உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு மருந்தக ஆய்வாளர்கள் தீவிரம்

 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு மருந்தக ஆய்வாளர்கள் தீவிரம்

பொள்ளாச்சி: கோவை மற்றும் திருப்பூர் மண்டலத்தில், மருந்து தயாரிப்பு நிறுவனங்களில், மருந்தக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பொதுவாக குழந்தைகள், மக்களுக்கு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில், மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதை டாக்டர்கள் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில்,கடந்த மாதம், இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் இறந்ததை தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் மருந்து தயாரிப்பு நிறுவனங்களை, கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளன. அவ்வகையில், 'திருத்தியமைக்கப்பட்ட அட்டவணை-எம்'-ன் படி, மருந்து தயாரிப்பு நிறுவனங்களில், தீவிர ஆய்வு மேற்கொள்ள மருந்து கட்டுப்பாட்டு துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். அதன்படி, ஒவ்வொரு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் செல்லும் அதிகாரிகள், மருந்து தயாரிப்பு மூலப்பொருட்கள் கொள்முதல் விபரங்கள், பதிவேடு பராமரிப்பு, தயாரிக்கும் இடங்கள் குறித்து முழுமையாக ஆய்வு நடத்துகின்றனர். இது குறித்து மருந்தக ஆய்வாளர்கள் கூறியதாவது: கோவை, திருப்பூர் மண்டலங்களைப் பொறுத்தமட்டில், குழந்தைகள் இறப்புக்கு காரணமான காஞ்சிபுரம் 'ஸ்ரீசன் பார்மா' நிறுவன தயாரிப்பு 'கோல்ட்ரிப்' மற்றும் 'நெக்ஸ்டரா' கொள்முதல் செய்யப்படாமல் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. அதனால், பாதிப்பு தவிர்க்கப்பட்டது. தற்போது, மருந்து தயாரிப்பு நிறுவனங்களில், 'திருத்தியமைக்கப்பட்ட அட்டவணை -எம்'ன் படி, தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டும் வருகிறது. அதில், சர்வதேச தரத்திற்கு இணையாக, மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக, உரிமையாளர்களிடம் கடுமையான தரக்கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி