சலுகை கட்டணத்தில் உடல் பரிசோதனை
கோவை: ஜி.ஆர்.என்., டயபடிக் சென்டர், தற்போது புதிய மருத்துவமனை பிரிவுகளுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் கோகுல ரமணன் கூறியதாவது: ஜி.ஆர்.என்., டயபடிக் சென்டரில் பல புதிய நவீன வசதிகளை கொண்டு வந்துள்ளோம். ஆய்வக பரிசோதனைகள் மிக விரைவாகவும், துல்லியமாகவும் இருக்கும். இதற்கு உலக தரம் வாய்ந்த ஆட்டோமெடிக் இயந்திரங்களை பயன்படுத்துகின்றோம். மேம்படுத்தப்பட்ட புதிய பிரிவில், ஒரே சமயத்தில் 50க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். தவிர, நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கான காத்திருப்பு அறை, கார் பார்க்கிங், ஸ்கேனிங், ஈ.சி.ஜி., என பல வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு உணர்ச்சி நரம்புகளின் பரிசோதனை, ரத்த ஓட்டம், ஸ்கேனிங், முழு உடல் பரிசோதனை அனைத்தும் நவீன இயந்திரங்களின் உதவியுடன் மேற்கொள்கின்றோம். புதிய ஜி.ஆர்.என்., டயபடிக் சென்டர் துவங்கியுள்ளதால், அனைத்து பரிசோதனைகள், சிறப்பு சலுகை கட்டணத்தில் எடுக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார். இம்மையம், வி.கே.கே மேனன் சாலையில், புது சித்தாபுதுாரில் அமைந்துள்ளது. மேலும், விபரங்களுக்கு, 0422-4580199/ 9087644003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.