உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காலி குடங்களுடன் குடிநீருக்காக மறியல்

காலி குடங்களுடன் குடிநீருக்காக மறியல்

ஆனைமலை;ஆனைமலை அருகே, குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.ஆனைமலை அருகே, அங்கலக்குறிச்சி புதுக்காலனயில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த, 15 நாட்களாக குடிநீர் வினியோகிக்கவில்லை எனக் கூறி, பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், காலிக்குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.மக்கள் கூறுகையில், 'குடிநீர் முறையாக வழங்க கோரி, அங்கலக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முறையாக நீர் வழங்க வேண்டும் என மறியலில் ஈடுபட்டுள்ளோம். தீர்வு காண வேண்டும்,' என்றனர்.அங்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், முறையாக குடிநீர் வினியோகிக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை