உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேமிப்பு பழக்கம் உருவாக்க மாணவர்களுக்கு உண்டியல்

சேமிப்பு பழக்கம் உருவாக்க மாணவர்களுக்கு உண்டியல்

மேட்டுப்பாளையம்; பள்ளி குழந்தைகளிடையே சேமிப்பு பழக்கத்தை உருவாக்கி, பணம் சேர்த்து வைக்க உண்டியல்கள் வழங்கப்பட்டன. மேட்டுப்பாளையம் இ.எம்.எஸ்., திருமண மண்டபத்தில், ஆகஸ்ட் 8ம் தேதியிலிருந்து, 17ம் தேதி முடிய புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்குவதற்கு, மாணவர்களிடையே பணம் சேமிக்கும் பழக்கத்தை, அறிவியல் இயக்கத்தினர், உருவாக்கி வருகின்றனர்.அதற்காக அரசு பள்ளிகளின் மாணவர்களுக்கு, இந்த அமைப்பினர் உண்டியல்களை கொடுத்து வருகின்றனர். காரமடை ஊராட்சி ஒன்றியம், ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை உருவாக்க, உண்டியல்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை புனித செல்வி வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் நிர்வாகி மணி, புத்தகங்கள் வாசிப்பின் அவசியம் குறித்து, மாணவர்களிடம் விளக்கி கூறினார். அரிமா ஜெயராமன் 'வாசிக்கும் பழக்கம், தாகம் தீர்க்கும் ஊற்று போன்றது. மாணவர்கள் சேமிக்கும் பழக்கத்தை சிறிய வயதிலிருந்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்,' என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியைகள் உமா, அமல சிந்தியா, பள்ளி மேலாண்மை குழு தலைவி ஷர்மிளா பானு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை