மேலும் செய்திகள்
ரூ.54.96 கோடி மதிப்பில் புது கோர்ட் கட்டுமானம்
18-Sep-2025
கோவை; கோவை கோர்ட் வளாகத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 45க் கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்படுகிறது. வழக்கு சம்பந்தமாக வக்கீல்கள்,பொதுமக்கள், போலீசார், கோர்ட் ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் தினசரி வந்து செல்கின்றனர். நீதிமன்ற வளாகத்தில் குப்பைகளை சேகரிக்க, சிஜேஎம் கோர்ட் பகுதியில் இரும்பு குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி உடைந்து பயனற்று கிடக்கிறது. இதனால் தரையில் வீசி செல்கின்றனர். வீசப்படும் குப்பைகளை மாநகராட்சி அப்புறப்படுத்துவது இல்லை. குப்பை குவியல் தேங்கி, உணவு கழிவுகளும் கொட்டப்படுவதால் தெரு நாய் தொல்லையும் கோர்ட் வளாகத்தில் அதிகரித்துள்ளது. துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. புதிய குப்பை தொட்டி வைக்க மாவட்ட நீதிமன்றம் மாநகராட்சிக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் கூறினர்.
18-Sep-2025