உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொலை வழக்கில் தோட்ட தொழிலாளிக்கு ஆயுள்சிறை

கொலை வழக்கில் தோட்ட தொழிலாளிக்கு ஆயுள்சிறை

கோவை: மதுரை மாவட்டம், சேடபட்டி, அவல்சூரி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்,38. கோவைபுதுார், சுண்டாக்காமுத்துார் மெயின் ரோட்டிலுள்ள செட்டியார் தோட்டத்தில் தங்கி வேலை செய்தார். குனியமுத்துாரிலுள்ள பால்காரர் குட்டியண்ணன் தோட்டத்தில் அய்யர்,40, என்பவர் வேலை செய்து வந்தார். இருவருக்குமிடையே கடன் கொடுத்தது தொடர்பாக, பிரச்னை இருந்து வந்தது. 2020,மே 17ல், பெருமாள் வேலை செய்த தோட்டத்திற்கு அய்யர் சென்று, கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்ட போது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தஅய்யரை, அவரது ஜாதி பெயரை சொல்லி திட்டியபடி, பெருமாள் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அய்யர் சம்பவ இடத்தில் இறந்தார்.குனியமுத்துார் போலீசார் விசாரித்து, பெருமாளை கைது செய்தனர். அவர் மீது, கோவையிலுள்ள எஸ்.சி.,-எஸ்.டி., சிறப்பு கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்ட பெருமாளுக்கு, கொலை குற்றத்திற்கு ஆயுள் சிறை, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை குற்றத்திற்கு ஆயுள்சிறை விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் பா லசுப்பிரமணியன் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை