மேலும் செய்திகள்
மரக்கன்று வழங்கல்
15-Sep-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி, 'அம்மா' பெயரில் நட்டு புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 'அம்மா' பெயரில் மரக்கன்று நடும் பசுமை விழா நடந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் சுகந்தி தலைமை வகித்தார். ஆசிரியர் சுப்புலட்சுமி நன்றி கூறினார். பள்ளி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கீதா கூறியதாவது: பள்ளி கல்வித்துறை உத்தரவின்படி, 'அம்மா' பெயரில் நடவு செய்து வளர்ப்பதற்கு மரக்கன்றுகள் வினியோகிக்கப்பட்டது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், 50 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. சீத்தா, நெல்லி, கொய்யா, மாதுளை போன்ற பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவரும், அவர்களது 'அம்மா' பெயரில் மரக்கன்றை வீடுகளில் நடவு செய்தனர். மரக்கன்று நடவுக்கு பின், 'பசுமை காவலர்' என்ற பள்ளி 'வாட்ஸ் அப்' குழுவில் போட்டோவை பகிர்ந்தனர். அதை, 'எக்கோ கிளப் பார் மிஷன்' என்ற ஆன்லைன் செயலியில் மாணவர்கள் பெயர், வயது, படிக்கும் வகுப்பு, பள்ளியின் எமிஸ் எண், பெற்றோர் பெயர் மற்றும் போட்டோ போன்ற தகவல்கள் உள்ளீடு செய்து சான்றிதழ் பதிவிறக்கம் செய்யப்பட்டது. மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சான்றிதழ், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதன் வாயிலாக மாணவர்களின் மனதில் பசுமை எண்ணத்தை வளர்க்கும் விதமாக சமுதாயத்தில் ஒரு பொறுப்புணர்வு மிக்கவர்களாக மாற்ற இது ஒரு அற்புதமான முறையாகும். மேலும், இந்த பழ மரங்களை நட்டு வளர்த்து அதன் வாயிலாக கிடைக்கும் முதல் பழத்தை ஆசிரியருக்கு பரிசாக கொடுக்கும் போது மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
15-Sep-2025