காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடவு
சூலூர்: காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் நினைவாக மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்வு வதம்பச்சேரி நல்லூர் பாளையத்தில் நடந்தது. விவசாயி ரவி தோட்டத்தில், பல்வேறு வகையான மரக்கன்றுகளை இயக்கத்தினர் நடவு செய்தனர். காவேரி கூக்குரல் இயக்கத்தினர் கூறுகையில், 'ஈஷாவின் தொடர் முயற்சி வாயிலாக, 12 கோடிக்கு அதிகமான மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில், 1.20 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு, இதுவரை, 76 லட்சத்து, 34 ஆயிரத்து, 220 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. நெல் ஜெயராமன் நினைவாக மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியும், இயற்கை விவசாய பணியும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்' என்றனர்.