உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பைக் திருட்டு குறித்து போலீசார் விசாரணை

 பைக் திருட்டு குறித்து போலீசார் விசாரணை

கிணத்துக்கடவு: விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார், 25. கிணத்துக்கடவு பெரியார் நகரில் வசிக்கும் இவர், முள்ளுப்பாடியில் உள்ள தனியார் கம்பெனிக்கு தினமும் பைக்கில் வேலைக்கு சென்று வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன், இரவு நேர பணிக்கு, கம்பெனி செல்ல வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது இவரது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து, அக்கம் பக்கத்தில் பைக்கை தேடி பார்த்துள்ளார். பைக் கிடைக்காததால், கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பைக் திருடிய நபரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை