உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசியல் கட்சியினர் வாகனங்களில் விதிமீறல்; திணறும் போக்குவரத்து போலீசார்

அரசியல் கட்சியினர் வாகனங்களில் விதிமீறல்; திணறும் போக்குவரத்து போலீசார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொள்ளாச்சி : தமிழகத்தில், மோட்டார் வாகன சட்டத்தை மீறி 'அட்ராசிட்டி'யில் வலம் வரும் அரசியல் கட்சியினரை தடுக்க முடியாமல், போக்குவரத்து போலீசார், ஆர்.டி.ஓ., அதிகாரிகள் விழி பிதுங்குகின்றனர்.தமிழகத்தில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர், போக்குவரத்து விதிமீறலையும் பொருட்படுத்தாமல், சொகுசு காரில் அதிவேகமாகச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.அதிலும், மோட்டார் வாகன சட்ட விதியை மீறி, தங்களது வாகனங்களில் கட்சி கொடியை கட்டிக் கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் பெரியதாக எழுதிக் கொள்வது, சிவப்பு, நீலம் கொண்ட எல்.இ.டி., விளக்குகளை பொருத்துவது, என, இவர்களின் அத்துமீறல் எல்லை தாண்டி செல்கிறது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:அரசியல் கட்சியினரின் இத்தகைய செயலுக்கு, மோட்டார் வாகன சட்டப்படி, அனுமதி இல்லை. சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து அதிகாரிகளில், எஸ்.ஐ., அதனை அகற்றவும், அதிகபட்ச அபராதம் வசூலிக்கவும் உரிமை உள்ளது. நடவடிக்கையில் ஈடுபட்டால், அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுடன், முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் சிபாரிசும் வந்து விடுகிறது. கட்சிக்கொடி மற்றும் பதவி பெயர் பலகைகளுடன் செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. கோர்ட் வாயிலாக கடுமையாக உத்தரவிட்டால் இத்தகைய விதிமீறலை தடுக்க முடியும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

अप्पावी
மார் 19, 2025 10:49

கள்ளக்கடத்த்ல் காரன் கூட கட்சிக் கொடி கட்டிக்கிட்டுப் போனா தத்தி அதிகாரிங்க சல்யூட் அடிச்சு வழியனுப்புவாங்க.


Mecca Shivan
மார் 19, 2025 09:43

கத்திப்பாரா அசோக்நகர் இறக்கம், நங்கநல்லூர் ஆதம்பாக்கம் சாலையில் தினமும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வரும் ஒரு பெரிய போலீஸ் குழு தினமும் அந்த இடத்தில எப்படி ?


Ram
மார் 19, 2025 08:07

போலீஸ் காரர்களும் ஒன்னும் சாமானியப்பட்டவர்கள் இல்லை, அவர்களின் வீரத்தை சாமானியர்கள் மீதுதான் கடுமையாக காட்டுவார்கள். எனக்கு தெரிந்து சென்னையில் நிறைய அரசு பஸ்கள் போக்குவரத்துக்கு விளக்குகளை மதிப்பதில்லை, உதாரணத்துக்கு ஒரு பஸ்ஸும் காரும் ஒன்றன்பின் ஒன்றாக சிவப்பு விளக்கை கடந்தால் போலீசார் காரைமட்டும் மடக்குகிறார்கள், ஏன் பஸ்சை நிறுத்தவில்லை என்றல் பதில் கூறுவதில்லை.. அப்போ அரசியவாதிகளுக்கும் மட்டும் இல்லை இந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் இவர்கள் பயப்படுகிறார்கள்


KRISHNAN R
மார் 19, 2025 07:44

பாரபட்சம் இல்லாமல் பத்திரிக்கைகள்.. ஃபோட்டோ எடுத்து கார் நம்பருடன் வெளியிட வேண்டும்


KRISHNAN R
மார் 19, 2025 07:42

இப்போது ஒரு படி மேலே போய், போலீஸ் அதிகாரி போல சிவப்பு மற்றும் நீல விளக்கு எரியுது


Mecca Shivan
மார் 19, 2025 10:45

அதுவும் radiator கிரில் உட்புறம் பதிக்கப்பட்ட சிகப்பு நீல எல் ஈ டீ விளக்குகளை கட்சியினர் குறிப்பாக திமுகவினர், விடுதலை சிறுத்தையினர் மற்றும் அரசு அதிகாரிகள் அதிகளவில் பயன்படுத்திக்கின்றனர்..ஒரு படி மேலே சென்று சில இருசக்கரவாகனங்களும் இதை பயன்படுத்திகின்றன ..நீதிமன்றம் வாகனத்தின் மேல் பகுதியில் சூழல் விளக்குகள் பயன்படுத்த தடைவித்ததால் இந்த குறுக்கு வழி ..


M R Radha
மார் 19, 2025 07:37

போலீசின் முதுகெலும்பு வளைந்து விட்டது


Oru Indiyan
மார் 19, 2025 07:17

பல வருடங்கள் முன்பே தமிழிசை அமர்ந்திருந்த கார் படு வேகமாக மியூசிக் அகாடமி சிக்னல் சிவப்பு விளக்கை மதிக்காமல் சென்றது இன்றும் ஞாபகம் வருகிறது. இரண்டு திருடர் கட்சி, வி சி க கார்கள் எப்போதுமே போக்குவரத்து விதிகளை மதிக்காது. மேல்மருவத்தூர் கூட்டம் டோல் கட்டணம் கட்டாமல் ஓடியதையும் பார்த்தவன் நான். அதிகார மமதை நம் நாட்டில் தலை விரித்தாடுகிறது.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 19, 2025 07:39

கொடி கட்டிய கார்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்ற வாய்மொழி உத்தரவை மைய ஒன்றிய நடுவண் அரசு திரும்ப பெறவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை