உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்துஸ்தான் கல்லுாரியில் பொங்கல் விழா அசத்தல்

இந்துஸ்தான் கல்லுாரியில் பொங்கல் விழா அசத்தல்

கோவை;நவஇந்தியாவில் உள்ள, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த பொங்கல் விழாவை கல்லுாரி நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, செயலாளர் பிரியா துவக்கி வைத்தனர்.கல்லுாரியின் அனைத்து துறை மாணவர்களும் பொங்கல் வைத்து வழிபட்டனர். கோலப்போட்டி, கயிறு இழுத்தல் போட்டிகள் நடந்தன. உணவு மற்றும் ஓட்டல் மேலாண்மை துறை சார்பில், ஆரோக்கிய உணவு பழக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கதம்ப சாமை, அக்கரவடிசல், தேங்காய்பால் கருப்பட்டி, உக்கரை குதிரைவாலி, வல்லாரை சோலை, எலுமிச்சை புல், கற்பூரவல்லி, கொய்யா வரகு, வெற்றிலை காம்பு, நெய் பனிவரகு உள்ளிட்ட பொங்கல் வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி, உணவு மற்றும் ஓட்டல் மேலாண்மை துறை தலைவர் பிரேம்கண்ணா, ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டின் ஷால்வின், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ