உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போத்தனுார் – பரூணி சிறப்பு ரயில் இயக்கம்

போத்தனுார் – பரூணி சிறப்பு ரயில் இயக்கம்

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக போத்தனுார்–பரூணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. போத்தனுாரில் இருந்து இன்று இரவு 9:55க்கு புறப்படும் ரயில்(06079) வரும் 10ம் தேதி காலை 9:00க்கு பீஹார் மாநிலம் பரூணி அடைகிறது. பரூணியில் இருந்து வரும் 10ம் தேதி இரவு 11:30க்கு புறப்படும் ரயில்(06080) 13ம் தேதி காலை 9:15க்கு போத்தனுார் அடைகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம், ரேணிகுண்டா, விஜயவாடா, நாக்பூர், ஜபால்பூர் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் இந்த ரயில் நின்று செல்லும் என, தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை