உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரிவாளால் வெட்டி விவசாயி கொலை கோழிப்பண்ணை குத்தகைதாரர் கைது

அரிவாளால் வெட்டி விவசாயி கொலை கோழிப்பண்ணை குத்தகைதாரர் கைது

ஆனைமலை- பொள்ளாச்சி அருகே, விவசாயியை அரிவாளால் வெட்டி கொலை செய்த நபரை ஆனைமலை போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி, சிங்காநல்லுாரை சேர்ந்தவர் விவசாயி ராதாகிருஷ்ணன்,58. இவருக்கு, ஏழு ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. தோப்பில் உள்ள இவரது கோழிப்பண்ணையை, அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார்,40, என்பவருக்கு குத்தகைக்கு விட்டார்.ராதாகிருஷ்ணன் மனைவி சரஸ்வதியின் பெற்றோர், சரஸ்வதிக்கு தர வேண்டிய ஒரு ஏக்கர் பூமிக்கு பதிலாக, 27 லட்சம் ரூபாய் கொடுத்தனர். அந்த பணத்தில் தோட்டத்தில் வீடு கட்டியதாகவும், அப்போது இருந்தே கணவன், மனைவியிடையே பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சரஸ்வதி சென்றார். கடந்த, 28ம் தேதி சமாதானம் பேசி சரஸ்வதி மற்றும் அவரது குழந்தைகளை, சிவக்குமார் அழைத்து வந்துள்ளார்.மனைவியை அழைத்து வந்ததால் கோபமடைந்த ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு சிவக்குமாருடன் தகராறில் ஈடுபட்டார். இதில், ராதாகிருஷ்ணனை, சிவக்குமார் அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.சப்தம் கேட்டு ராதாகிருஷ்ணனின் சகோதரர் காளிமுத்து, அவரது நண்பர் வேல்முருகன் சென்று பார்த்த போது, 'அருகே யாராவது வந்தால் வெட்டிவிடுவேன்' என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, காளிமுத்து கொடுத்த புகாரின் பேரில், ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவக்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை