உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குழந்தையுடன் கர்ப்பிணி தற்கொலை; கொடூர கணவருக்கு 7 ஆண்டு சிறை

 குழந்தையுடன் கர்ப்பிணி தற்கொலை; கொடூர கணவருக்கு 7 ஆண்டு சிறை

கோவை: கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்ததாக, அவரது கணவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை சின்னதடாகம், கருப்பராயன்பாளையத்தை சேர்ந்தவர் தனபால், 35; தொழிலாளி. மனைவி மகேஸ்வரி, 30. ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருந்தது. தனபால் அடிக்கடி மது குடித்து விட்டு, மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்தார். மகேஸ்வரி மீண்டும் கர்ப்பமான நிலையிலும், தனபால் துன்புறுத்தினார். கைக்குழந்தையுடன் மகேஸ்வரி, டிச., 12, 2018ல், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். இதில் கைக்குழந்தை மற்றும் வயிற்றில் இருந்த சிசுவும் இறந்தது. இதுகுறித்து, கோவை ரயில்வே போலீசார் தனபால் மீது வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு துாண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை, கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. தனபாலுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுந்தரரா ஜன் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை