மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
3 minutes ago
தேசிய நூலக வார விழா
4 minutes ago
டிப்பர் லாரி மோதி சாய்ந்தது மின் கம்பம்
4 minutes ago
இன்றைய நிகழ்ச்சி
4 minutes ago
கோவை: பிரதமர் புதிய வேலை வாய்ப்பு திட்டம் குறித்து, கோவை மண்டல பி.எப்., கமிஷனர், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் இருதரப்பினருக்கும் பலன் அளிக்கும் வகையில், 'பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கார் யோஜனா' என்ற புதிய திட்டம் பி.எப்., அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து, கோவை மண்டல பி.எப்., அலுவலகம் சார்பில், கோவை மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுடன், சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் கோவையில் உள்ள முன்னணி தொழிற்சங்கங்களான ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., சி.எம்.எஸ்., ஹெச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யூ.சி., மற்றும் எல்.பி.எப்., உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற கோவை மண்டல பி.எப்., கமிஷனர் பிரசாந்த், 'பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கார் யோஜனா' மற்றும் ஊழியர்கள் பதிவு இயக்கம், 2025 ஆகியவற்றின் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தார்.அவர் பேசியதாவது: இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி அறிமுகப்படுத்தினர். ஆக. 1 ம் தேதி முதல் 2027 ம் ஆண்டு ஜூலை வரை பி.எப்., அலுவலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தில் முதல் முறையாக வேலைக்கு சேரும் ஒரு தொழிலாளிக்கு அவரது ஒரு மாத ஊதியத்துக்கு சமமான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை அதிகபட்சம், 15 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு, இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.வேலை கொடுக்கும் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு, மாதம் தோறும் 3000 ரூபாய் இரண்டு ஆண்டுகள் வரையும், உற்பத்தி துறையில் உள்ளவர்களுக்கு நான்கு ஆண்டுகள் வரையும் இந்த மானியத் தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம், தொழிலாளர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் இரு தரப்பினரும் பலன் பெறுவார்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
3 minutes ago
4 minutes ago
4 minutes ago
4 minutes ago