உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தனியார் கம்பெனி பணியாளர் பலி

 தனியார் கம்பெனி பணியாளர் பலி

நெகமம்: நெகமம், ஏரிப்பட்டியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டத்தைச்சேர்ந்தவர் மேகநாதன், 25, இவர் ஏரிப்பட்டியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று கம்பெனியில் மேகநாதன் வேலை செய்து கொண்டிருந்தபோது, இவரின் அருகே ஆயிரம் கிலோ கொண்ட பெரிய அளவிலான மூன்று பார்சல், வைக்கப்பட்டு இருந்தது. இதில் எதிர்பாராத விதமாக, அந்த பார்சல் மேகநாதன் மீது சறுக்கி விழுந்தது. இதைக் கண்ட அருகில் இருந்த பணியாளர்கள், அந்த பார்சலை நகர்த்தி மேகநாதனை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி