உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரும் 15ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

வரும் 15ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

உடுமலை: தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், 15ம் தேதி காலை, 10:30 மணி முதல், மதியம், 2:00 வரை நடக்கிறது.பொதுமக்கள் குறைகேட்பு அரங்கில் நடக்கும் முகாமில், முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பணியாளர் மற்றும் அலுவலர்களை தேர்வு செய்ய இருக்கின்றன. குறைந்தபட்சம், 15 ஆயிரம் ரூபாய் மாதசம்பளத்தில், வேலை வாய்ப்பு பெறலாம். ஐ.டி.ஐ., - டிப்ளமோ படித்தவர்கள், பட்டதாரிகள் பங்கேற்று, வேலை வாய்ப்பு பெறலாம். வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் 'பயோடேட்டா' விபரங்களுடன் பங்கேற்க வேண்டும்.தொழிலாளர்களை தேர்வு செய்ய விரும்பும் தனியார் நிறுவனங்களும், https:/www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 94990 55944 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை