உடுமலை -திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், வரும், 17ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் வரும், 17ம் தேதி திருப்பூரில் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.குமரன் கல்லுாரி வளாகத்தில் காலை, 8:30 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.இதில், எழுதப்படிக்க தெரிந்தவர் முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளநிலை, முதுகலை பட்டம், பொறியியல் கல்வி, தொழிற்கல்வி, கம்ப்யூட்டர் ஆபரரேட்டர், ஓட்டுநர்கள், தையல் பயிற்சி பெற்றோர் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் பங்கேற்கலாம்.இந்த சேவை முற்றிலும் இலவசம். இதன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது.வேலை தேடுவோர் தங்களைப் பற்றிய முழு விபரங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு 0421 - 2999152, 94990 55944 எண்களில் தொடர்பு கொள்ளலாம். வேலை தேடுவோர் மற்றும் வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள், www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணைய தள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இத்தகவலை, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.