உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தேசிய நுாலக வாரவிழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

 தேசிய நுாலக வாரவிழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

வால்பாறை: வால்பாறை கிளை நுாலகத்தில் தேசிய நுாலக வார விழாவையொட்டி நடந்த கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வால்பாறை நகரில் உள்ள முழுநேர கிளை நுாலகத்தில், 58வது தேசிய நுாலக வார விழா நுாலகர்கள் தனபாலன், வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் நடந்தது. நுாலக வாரவிழாவையொட்டி, கடந்த வாரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான கட்டுரை போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு வால்பாறை நுாலகத்தில் பரிசு வழங்கும் விழா நடந்தது. அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் தெய்வநாயகம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். நுாலக அதிகாரிகள் கூறியதாவது: வீட்டிலும், வெளியிடங்களிலும் மாணவர்கள் மொபைல்போனில் நேரத்தை வீணடிகாமல், நுாலகத்தில் குவிந்து கிடக்கும் எண்ணற்ற நுால்களை படித்து பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, அன்றாடம் செய்தித்தாள்களை தவறாமல் படிக்க வேண்டும். போட்டித்தேர்வுக்காக படிக்கும் மாணவர்களுக்கு நுாலகத்தில் தேவையான நுால்கள் உள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நுாலகங்களை தவறாமல் பயன்படுத்தி, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். இவ்வாறு, கூறினர். போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நன் கொடையாளர் வினு பரிசுகளை வழங்கினார். நுாலக பணியாளர்கள் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்