உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி ஆண்டு விழா கோலாகலம்: சாதித்த மாணவர்களுக்கு பரிசு

பள்ளி ஆண்டு விழா கோலாகலம்: சாதித்த மாணவர்களுக்கு பரிசு

கூடலுார்:கூடலுார் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில், மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவில் சாதித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.கூடலுார் அரசு மேல்நிலை பள்ளியில், 75ம் ஆண்டு விழா நடந்தது. உதவி தலைமை ஆசிரியார் சுரேஷ்குமார் வரவேற்றார். விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அய்யப்பன் தலைமை வகித்தார்.கூடலுார் முன்னாள் எம்.எல்.ஏ., திராவிடமணி, தேவாலா டி.எஸ்.பி., செந்தில்குமார், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராபர்ட் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.விழாவில், கலை மற்றும் விளையாட்டு போட்டிகளில் மாநில, மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பள்ளியில் மாணவர்கள் இடையே நடந்த கலை மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி, பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், தேவர்சோலை அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி, புளியாம்பாறை அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் டெய்சிவிமலாராணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ