உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சொத்து வரி செலுத்துவதற்கு இன்றும், நாளையும் முகாம்

சொத்து வரி செலுத்துவதற்கு இன்றும், நாளையும் முகாம்

கோவை; கோவை மாநகராட்சிக்கு சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள் செலுத்துவதற்கு வசதியாக இன்றும் (22ம் தேதி), நாளையும் (23ம் தேதி) காலை, 9:00 முதல் மாலை, 6:00 மணி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.கிழக்கு மண்டலம்: விசுவாசபுரம் ரேஷன் கடை, வீரியம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில், காளப்பட்டி நேரு நகர் பஸ் ஸ்டாப் அருகில், சவுரிபாளையம் மாரியம்மன் கோவில் அருகே சமுதாய கூடம், எஸ்.ஐ. எச்.எஸ்., காலனி மாநகராட்சி பள்ளி, ஒண்டிப்புதுார் சுங்கம் மைதானம்.மேற்கு மண்டலம்: சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் மைதானம்.வடக்கு மண்டலம்: ஜனதா நகர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, சுப்பிரமணியம்பாளையம் அங்கன்வாடி மையம், மணியகாரம்பாளையம் அம்மா உணவகம், காந்தி மாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, காமதேனு நகர் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், கணபதி டீச்சர்ஸ் காலனி சுகாதார ஆய்வாளர் அலுவலகம்.தெற்கு மண்டலம்: குனியமுத்துார் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், சுண்டக்காமுத்துார் சுகாதார ஆய்வாளர் அலுவலகம்.மத்திய மண்டலம்: சங்கனுார் நாராயணசாமி வீதி சிறுவர் பூங்கா, நியூ கலெக்சன் சென்டர் பெருமாள் கோவில் வீதி, கெம்பட்டி காலனி ஒக்கிலியர் காலனி ஸ்கூல்.* சுண்டப்பாளையம் பெருமாள் கோவில், கரும்புக்கடை பிலால் நகர், குனியமுத்துார் விநாயகர் கோவில் வீதி ஆகிய இடங்களில் இன்று (சனிக்கிழமை) மட்டும். பூசாரிபாளையம் சமுதாய கூடம், பிள்ளையார்புரம் ஹவுசிங் யூனிட் பேஸ்-2, போத்தனுார் சாரதா மில் ரோடு ஆகிய இடங்களில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை