உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகை

மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகை

வால்பாறை; தொழிலாளர்களை தரக்குறைவாக பேசி மிரட்டும் எஸ்டேட் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தொழிலாளர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.வால்பாறை அடுத்துள்ளது, வறட்டுப்பாறை காபி எஸ்டேட். இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், இந்த எஸ்டேட் மேலாளர், தொழிலாளர்களை பணி நேரத்தில் தரக்குறைவாக பேசி வருவதாக கூறப்படுகிறது.அவரின் செயலை கண்டித்து, தொழிலாளர்கள் கடந்த வாரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சுப்ரமணியம் என்ற தொழிலாளி பணி செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த எஸ்டேட் மேலாளர் திரிஷப்ஸ்ரீவிஸ்வா அவரை தாக்கியதில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.எஸ்டேட் மேலாளரின் இந்த நடவடிக்கையை கண்டித்து, வறட்டுப்பாறை காபி எஸ்டேட் தொழிலாளர்கள், வால்பாறை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.அவர்களிடம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், தொழிலாளர்களின் புகார் அடிப்படையில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து, தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை