நஞ்சே கவுண்டன்புதுாரில் பஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
கோவை : கோவை நஞ்சே கவுண்டன்புதுாரில் பஸ் வசதி கேட்டு, ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க ஒன்றிய தலைவர் மனோஜ் தலைமை வகித்தார். சங்க உறுப்பினர்கள் உட்பட, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.