வனவிலங்குகளால் பாதிப்பு; 7ம் தேதி ஆர்ப்பாட்டம்
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை ஆதிமதையனூரில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக நேற்று மாலை வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதுகுறித்து தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் கூறியதாவது:-வனவிலங்குகள் பயிர் சேதம் செய்வதோடு, மக்களையும் தாக்கி வருகிறது. இதுவரை இதற்காக விவசாயிகள் மட்டும் போராடி வந்த நிலையில், விவசாயிகளுடன் பொதுமக்களும் ஒருங்கிணைந்து போராடினால் தான் வெற்றி பெற முடியும் என முடிவு செய்யப்பட்டது.இதற்காக கிராமம் தோறும் வன விலங்குகளிடமிருந்து விவசாயத்தையும், மக்களையும் காப்பாற்றும் இயக்கம் துவங்கப்பட்டது. விவசாயிகளின் சார்பாகவும், பொதுமக்களின் சார்பாகவும் பொறுப்பாளர்கள் இதற்காக நியமிக்கப்பட்டனர்.வனவிலங்குகள் பிரச்னைக்கு தீர்வு காண வரும் 7ம் தேதி மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். பெண்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.---