உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்

 மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு நகராட்சித் தலைவர் சியாமளா தலைமை வகித்தார். பள்ளித்தலைமையாசிரியர், ஆசிரியர்கள், வடக்கு நகர பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன், கவுன்சிலர் ஜோதிமணி மற்றும் என்.ஐ.ஏ. கல்வி நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதில், 244 மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி