உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொதுத்தேர்வு ஆயத்தம்; பள்ளிகளில் ஆய்வு

பொதுத்தேர்வு ஆயத்தம்; பள்ளிகளில் ஆய்வு

உடுமலை : பிளஸ் 2 பொதுத்தேர்வு நெருங்கியுள்ள நிலையில், மாணவ, மாணவியருக்கு பாடங்கள் எவ்வாறு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து, முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையிலான குழுவினர் பள்ளிவாரியாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ளது. தற்போது, இறுதிக்கட்ட திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.பிப்., முதல் வாரத்தில் செய்முறை தேர்வு நடக்கவுள்ளது. இதற்காக ஆய்வகம், கம்ப்யூட்டர் அறைகள் தயார் படுத்தும் பணி நடந்து வருகிறது.பொதுத்தேர்வுக்கு பள்ளிகள் தயாராகி விட்டனவா; மாணவ, மாணவியரின் மனநிலை எப்படி; மொழி மற்றும் முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடங்களை முடித்து விட்டு, எத்தனை முறை மாதிரி மற்றும் திருப்புதல் தேர்வுகள் நடத்தியுள்ளனர்.தேர்ச்சி சதவீதம் உயர்த்த என்ன முயற்சி எடுத்துள்ளனர்; தலைமை ஆசிரியர் - வகுப்பாசிரியரின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) உதயகுமார் தலைமையிலான மாவட்ட கல்வி அதிகாரிகள் குழு, ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளி வாரியாக ஆய்வு செய்யும் பணியை துவக்கியுள்ளனர்.பாடவாரியாக ஆசிரியர்களைச் சந்தித்து மாணவ, மாணவியருக்கு பாடங்களை எவ்வாறு கற்பித்துள்ளீர்கள் என்று கேட்டறிந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி