| ADDED : நவ 23, 2025 06:34 AM
அன்னூர்: அவிநாசி தொகுதியை சேர்ந்த அன்னூர் ஒன்றியத்தில் 117 ஓட்டு சாவடிகள் உள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம், அன்னூர் ஒன்றியத்தில் நேற்று நடந்தது. இதில் பலர் படிவங்களை நிரப்பவும், நிரப்பிய படிவங்களை வழங்கவும் வந்தனர். ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களுடன், அரசியல் கட்சி நிர்வாகிகளும் முகாமில் பங்கேற்றனர். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் சிலர் கூறுகையில், '98 சதவீதம் படிவங்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு விட்டன. எனினும் படிவங்களை நிரப்பி தருவோர் எண்ணிக்கை, மிகக் குறைவாகவே உள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லை. தொலைபேசியில் தெரிவித்தாலும் ஆர்வம் காட்ட மறுக்கின்றனர். டிச.,4ம் தேதி வரை அவகாசம் உள்ளது என்கின்றனர். வாக்காளர்கள் படிவங்களை நிரப்பி கொடுத்தால், நாங்கள் அதை செயலியில் பதிவேற்ற வேண்டும். எனவே வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, விரைவில் படிவங்களை நிரப்பி திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். முகாம் நடைபெறும் இடங்களில் படிவங்களை நிரப்ப, கூடுதலாக தன்னார்வலர்கள் நியமிக்க வேண்டும். 2002 வாக்காளர் பட்டியலும் வைக்கப்பட வேண்டும்' என்றனர்.