கிணற்றில் தவறி விழுந்து பம்ப் ஆப்ரேட்டர் பலி
வால்பாறை; வால்பாறை அருகே, தண்ணீர் தொட்டில் தவறி விழுந்த பம்ப் ஆப்ரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார். வால்பாறை அடுத்துள்ள, வில்லோனி எஸ்டேட் மேல் பிரட்டை சேர்ந்தவர் பழனிசாமி,64. இவர், எஸ்டேட்டில் தற்காலிக பம்ப் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தண்ணீர் திறப்பதற்காக சென்ற அவர், கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, அவரது மனைவி ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.