உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புரந்தரதாசர் ஆராதனை விழா: மூன்று நாட்கள் நடக்கிறது

புரந்தரதாசர் ஆராதனை விழா: மூன்று நாட்கள் நடக்கிறது

கோவை;கோவையில் புரந்தரதாசர் ஆராதனை விழா, ஆர்.எஸ்.புரம் புரந்தரதாசர் கலையரங்கத்தில் மூன்று நாட்கள் நடக்கிறது.பி.என்.ராகவேந்திர ராவ் மெமோரியல் டிரஸ்ட் சார்பில், ஆண்டுதோறும் புரந்தரதாசர் ஆராதனை விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான விழா, கடந்த 8ம் தேதி துவங்கி, இன்று வரை நடக்கிறது. முதல் நாள் ஸ்ரீ மதி விசாகாஹரி குழுவினரின் சங்கீத உபன்யாசம் நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை 6:30 மணிக்கு, யுவ புரந்தர ஸ்ரீ சந்தீப் நாராயணன் குழுவினரின் பாட்டுக்கச்சேரி நடந்தது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இன்று (பிப்.,10) மாலை 6:30 மணிக்கு கடையநல்லுார் துக்காராம் கணபதி மகராஜ் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி