காரமடை ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோயில். நேற்று மூன்றாவது சனிக்கிழமை விழாவை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பக்தர்கள் கொண்டு வந்த அரிசி, பருப்பு, காய்கறி, மளிகை பொருட்கள் ஆகியவற்றை தாசர்களுக்கு படைத்தனர்.