உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோயமுத்துார் விழாவில் ரேஸ் பைக் வீரர்கள் சாகசம்

 கோயமுத்துார் விழாவில் ரேஸ் பைக் வீரர்கள் சாகசம்

கோவை: கோவை விழாவின் ஒரு பகுதியாக, 'பெஸ்டிவல் ஆப் ஸ்பீடு' என்ற கார் மற்றும் பைக் சாகச நிகழ்ச்சி, கொடிசியா மைதானத்தில் நேற்று நடந்தது. ஜே.கே. டயர் மற்றும் டிரிப்ட் வுல்ப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சொல்யூஷன்ஸ் இணைந்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில், ஆறு ரேஸ் கார்கள், வீரர்கள் மற்றும் நான்கு பெர்பார்மன்ஸ் ரேஸ் பைக் வீரர்கள் சாகசங்களை நிகழ்த்தி காட்டினர். பொதுமக்கள் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்கள் என, 1000க்கும் மேற்பட்டவர்கள் சாகச நிகழ்ச்சியை ரசித்து, ஆரவாரம் செய்தனர். நிகழ்ச்சியில், பங்கேற்ற ரேஸ் வீரர்கள் மற்றும் பைக் வீரர்கள் கூறுகையில், ''இந்த நிகழ்ச்சியை பார்க்கும் இளைஞர்கள், சாலைகளில் தங்கள் வாகனங்களை ஓட்டும் போது, இது போன்ற சாகசங்களை செய்ய முயற்சி செய்யக்கூடாது. முறையாக பயிற்சி பெற்று ஓட்டுனர் உரிமம் பெற்று பின்னர், பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி வாகனங்களை ஓட்ட வேண்டும். சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்